×

மலர் கண்காட்சியையொட்டி வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஊட்டி, மே 10: மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் கோடை விடுமுறையின் போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் நிலையில், இம்முறை 126வது மலர் கண்காட்சி இன்று 10ம் ேததி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.  ஆண்டு தோறும் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள், சர்க்கீயூட் பஸ்கள் மற்றும் பார்க் அன்ட் ரெய்டு பஸ்களும் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் முதலே சுற்றுலா பயணிகளுக்காக சர்க்கியூட் பஸ் இயக்கப்பட்டது. தற்போது 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மலர் கண்காட்சியை முன்னிட்டு 30 சர்க்கீயூட் பஸ்கள் இயக்கப்படுகிறது. மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சியை காண வெளி மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதல் சர்க்கீயூட் பஸ்கள், பார்க் அன்ட் ெரய்டு பஸ்களும் மலர் கண்காட்சி நடக்கும் மூன்று நாட்களும் இயக்கப்படவுள்ளது. இது தவிர கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இந்த பஸ்கள் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படவுள்ளது. கோவையில் இருந்து 25 பஸ்களும், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 பஸ்களும் என 75 பஸ்கள் போக்குவரத்து கழகங்கள் மூலமாக ஊட்டிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே, மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு பஸ்கள் மூலம் எளிதாக வந்துச் செல்ல முடியும். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: இன்று மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், அங்கிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சர்க்கீயூட் பஸ்கள் மற்றும் பார்க் அன்ட் ரெய்டு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தால், கூடுதலாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் அனைத்தும் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மலர் கண்காட்சியையொட்டி வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : flower fair ,Ooty ,Nilgiri district.… ,Dinakaran ,
× RELATED ஊட்டி மலர் கண்காட்சி துவக்க...